தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • மீ தூண் விரும்பேல்.
  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
  • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.